Tuesday, May 9, 2017

அந்தி நேர வானவில்....

அந்தி நேர வானவில்.....
முந்தி முந்தி வருகையிலே மனம்
பிந்தி பிந்தி ஓடுதடி என் சகியே
விந்தி விந்தி வாடுதடி என் சகியே


சந்திரன் போல் மதி கொண்டான்
இந்திரனாய் மதி வென்றான்
வந்திடுவேன் விரைந்தென்றான்
சிந்தும் மழைக்  காலம் வருமுன்னே
எந்திரமாய் எந்நாளும் ஆனதுவே
தந்திரமாய் என் செய்தான்
மந்திரங்கள் இதற்கு உண்டோ
மங்கை நீ செப்பிடுவாய்

அங்குமிங்கும் அலைந்து
திரியும் ஆனந்த மேகம் கண்டு
சிரிக்கும் சிறகடிக்கும் நல்
ஊரினிலே நான் மட்டும்
வேரினிலே விலகாத பயம் கொண்டு
கார் முகில் கண்டு கலங்குவதேன்

ஊர் மகிழ மண்ணிற்கு மரத்திற்கு
வேர் நனைத்து சிலிர்ப்பூட்டும்
அறிவிப்பாய் அழகு வண்ண
அந்தி நேர வான்வில்லே ..
மன்னவனும் வந்திடுவான்
மழை முகிலின் துணையோடு
என்றே நீ செப்பிடுவாய்
முன்றில் வந்து முதல்
துளியை முத்தாய்ப்பாய்
நான் பெறுவேன்...

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...