Friday, May 5, 2017

ஏகபோக வனம் ..குறுந்தொகை#202

ஏகபோக வனம்  
வாகாய் நெருஞ்சிக் காடு ..
சிறுமலரும்
கூட்டமாய்
உறு முள்ளும்
உள்ளதனால்
சிறு மனது சிதறியது  
இருளாகி  பதறியது
நோ(கு)ம் என் நெஞ்சே….


பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்
“நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே” என்ற குறுந்தொகைப் பாடலை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்டது.

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.


உரை: தோழி, என் நெஞ்சு வருந்துகிறது; என் நெஞ்சு வருந்துகிறது.முல்லை நிலத்தில், நெருங்கி முளைத்த, சிறிய இலைகளையுடைய நெருஞ்சி, முன்னர் கண்ணுக்கு இனிய புதியமலரைத் தோற்றுவித்துப் பின்  துன்பத்தைத்தரும் முள்ளைத் தருவதைப்போல, முன்பு நமக்கு இனியவற்றைச் செய்த நம் தலைவர், இப்பொழுது இன்னாதனவற்றைச் செய்வதால், என் நெஞ்சு வருந்துகிறது


நன்றி : முனைவர். பிரபாகரன்
nallakurunthogai.blagspot.com

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...