Friday, May 5, 2017

எதிலும் அரசியல்

எதிலும் அரசியல்
எங்கும் அரசியல்
எப்போதும் அரசியல் - காரணம்
தப்பாமல் அரசியல்
என்றதோர் இழிநிலை
இன்று நம் உலகம்
கண்டு மருக ..நாமோ
கண்கள் சொரிய .

“தான்” என்பது தலைவிரித்தாட
தன்னினம்  பெண்டு பிள்ளை
முன்னிறுத்தி  - பிறர்க்கு
கண் பொத்தி வாழும்
கயமை உருவாய் அரசியல் .

வாழ்வியல் விழுமியங்கள்
வீழ்ந்து பட்டு உயிரிழக்க
இந்நாளைத் தான்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
பாழ்பட்டதோர் பாரத தேசமென
பொருமி முண்டாசுக் கவி
சுதந்திர இந்தியாவிற்கு
முன்கதைச் சுருக்கம் எழுதிச்
சென்றானோ ?

படித்தவன் பாவம் செய்தால்
‘அய்யோ’ வெனப் போவான்
அடிவயிற்றுச்   சாபம்
கொடுத்தானே  எம் பாரதி ..- அதுவும்
அடுத்தடுத்து நடந்திடுமோ …?
அச்சாரமாய் அரங்கேறும் ..
அரசியல் காட்சிகள் …..

அதற்கான சாட்சிகள்…

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...