Friday, May 5, 2017


ஜில்லுனு ஒரு  படக்கவிதை

கொளுத்தும் வெயிலுக்கு சுகமாய்
கொழுகொழு குழந்தைக்  குளியல்
கொட்டும் நீரெல்லாம்
கெட்டிட  கூடாதென்று
வட்டமாய் வாளி வைத்து
திட்டமாய் நீர் சேகரிப்பு ..
வருங்கால சந்ததியே
வருந்தாதே நீயும்..
இவ்வறிவுடன் என்றும்
செவ்விய சிந்தையாய்
வாழ்ந்திட்டால் ..வந்திடுமோ
தாழ்ச்சியும் யாருக்கும்?
வீழ்ச்சியும் வாரா
சூழ்ச்சியும் சேரா

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...