Friday, May 5, 2017

கனவுக் குதிரைகள்

கனவுக் குதிரைகள்

கட்டறுந்து ஓடும் கனவுக் குதிரைகள்
காலையில் கண் மலர
சோலையாய் பூந்தோட்டம்  
கையில் தேநீருடன் துணையது
கற்றைத் தாளுடன் கண்ணே நீ
கவிதைகளை காற்றில் கடைந்தெடு
வீட்டினை நான் நோக்குவேன்
காதினிலே தேன் பாய்ச்ச வேண்டும்

காலை பரபரப்பு ..கருத்துடனே
வேலை பல அடுக்கடுக்காய்
சாலை நெரிசல் நெருக்கடிகள்
மூளையோரம் முகிழ்ந்திடும்
கவிதைகளின் அணிவகுப்பு
கனவுக் குதிரைகளீன்ற  
குட்டிக் குதிரைகளாய் கும்மாளமிட

காற்று வெளியிடை கண்ணம்மாவுடன்
காணி நிலங்கேட்ட
முண்டாசுக்கவி எண்ணி  
மூச்சொன்று சீறுதே பொருமலாய்

கனவுக் குதிரையிலே
காலமெலாம் கரைந்தாயே - எம்  
கவியே ..உம்  துணிவு
கலியுகத்தில் எம்மிடத்தில்
கடுகளவும் காணுதில்லையே - நாம்

விற்பனையுலகின் பந்தய குதிரைகளாய்
கற்பனையுலகின் குதிரைகள் ஏதிங்கு?
இரட்டை குதிரை சவாரி கூடுமோ?

எட்டயபுரத்தானே எமை ரட்சிப்பாய் !

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...