Friday, May 5, 2017

இரண்டு மனம் வேண்டும் இறைவா

இரண்டு மனம் வேண்டும் இறைவா
இலக்கணம் இனிதாய் ஏற்று
மரபுக் கவியிங்கு   
மகிழ்வாய் இயற்றிட  ஒன்று


மீமொழி விதி கற்று
மீட்டிடும் திறன் பெற்றிட
மீண்டும் கேட்கிறேன்
மற்றொரு மனம் நன்று

தெம்மாங்கை  திகட்டாமல்
தித்திப்பாய் தந்திடவே  
திட்டாமல் தந்துவிடு
மனமொன்றை

கானாப்பாட்டை
தேனாய் பாட
இன்னொரு மனம்
வேண்டுமெனக்கு

துளிப்பாவை துள்ளலாய் முடிக்க
தொடர் துளிப்பாவை தொட்டு தொடர
நீள் துளிப்பாவை நீட்டவும்   
நகைத்துளிப்பாவை நயமாய் நவிலவும்  
உரைத்துளிப்பாவை உரக்கச் சொல்ல  
இயைபுத்துளிப்பாவை  இடராமல் இயற்றவும்  
ஈறுதொடங்கித்  துளிப்பாவை இசையொடு இழைக்க
ஓவியத் துளிப்பாவை காவியமாக்க
ஓ இறைவா ..இரண்டு மனம் போதாது
ஓராயிரம் எதற்கும் தந்துவிடு
லகரத்தில் கொடுத்தாலும்
அகரத்தில் திளைத்திடவே
அதுவும் தான் போதுமோ?

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...