காவியக் காதலில் அழியா
ஓவியமாய் திகழ
மண் அறியா மெல்லடியாள்
கண்ணகியோ அக்கால சான்றாவாள்
கண்கெட்டும் சூரிய நமஸ்காரம்
பண்ணாத மாக்களையே
தன் முதுகு சுமையாக்கி
வாழ்க்கை துணையென்று
வழக்கமான பெயர் சூட்டி
சளைக்காமல் சுற்றும்
செக்குமாடு வாழ்வினியிலே
எக்குத்தப்பாய் ஓடும்
பல உண்மை காவியங்கள்….
No comments:
Post a Comment