#1
வருங்கால மன்னர்கள்
காத்திருப்பு ….. மானுடத்தின்
திவச சாப்பாடு
#2
முண்டியடிக்கும் கூட்டத்தில்
எதிர்கால கண்டுபிடிப்பாளர்
வயிறு வங்கி
#3
நீளும் கைகள்
தேடும் கண்கள்
உயிர் வேட்கை
#4
எட்டி நீளுது கைகள்
பட்டணம் அதிருது சத்தம்
வயிற்றின் ஓலம்
#5
உணவிற்கு நீளும் கையில்
கருப்பு வெள்ளையில்லை
வயிற்று பசி
No comments:
Post a Comment