Friday, May 5, 2017

அன்பு ஆட்டுக்குட்டி

கருப்பா ..அன்பு ஆட்டுக்குட்டி

பொறுப்பாக ..பசும்புல்லை ..
நறுக்குன்னு கடிக்கையிலே
நாலாப்பக்கம் ..
ஆளா விரட்டி ..
வேலிக்குள்ள வச்சதேனோ
வெள்ளைச்சாமியண்ணே ? - என்
கள்ளமில்லாக் கருப்பா - உன்
உள்ளமெல்லாம் வெளுப்பா ?
செல்லப் பிள்ளையா நான்
வளத்தேன் பாரு
நல்லபடி நீ பொழைக்க வேணுமடா .
வெட்டுப் பட்டு சாகும் கொடும
துட்டுக்காக நான் தரல
புள்ளக் குட்டி பார்க்க வார
விலங்கு காட்சி சாலைக்கு
வெள்ளனவே நீ போற ஆமா ..
பத்திரமா பொழச்சுக்கடா

சித்திரமா புள்ளைகளப் பாத்துக்கடா ..

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...