Friday, May 5, 2017

ஒற்றைச் சிலம்பை பற்றி...



ஒற்றைச் சிலம்பை
பற்றி வந்து பார் அதிர  

நீதி கேட்டாய்
வீதியிலே தமிழ் மகளே

சதியென்று தாம் தெரிந்தும்
விதியென்று வாளாவிருந்தனையோ?

கதி கெட்டு நின்றாலும்
எது நியாயமென்று கேட்டனையே
இது வேண்டும் தந்திடுவாய்
எங்குல பெண்டிர்க்கு
தங்கு தடை வென்று வர
மங்காத்தமிழ் மகளே !

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...