நள்ளிரவு நேரம் தாண்டி
துள்ளலாய் வாடைக் காற்று
துணைக்கு தூவானம்
தூறலை துப்பாட்டாவாக்கி
கனத்த கம்பளிக்குள் சரணாகி
முகம் மட்டும் மேகக்கூட்டம்
விலக்கி வரும் நிலவு பார்க்க
வெளியே நீட்ட சில்லிட்ட மூக்கு நுனி
தாழ்வார தகரத்தில் தாளகதியோடு
தனியாவார்த்தன மழை இசை
நிச்சலன நிமிடங்கள் ..
விண்மீன்கள் வியந்து கண்சிமிட்ட
விடியும் விடியாத பொழுதினிலே
தனியாக எனக்கான அற்புதம்
காந்தர்வ காதல் ...
No comments:
Post a Comment