பரிதி சாய்ந்ததும்..
பரி ஏறி பாய்ந்ததும்..
பால் நிலவு ஊராத
இரவொன்றுண்டு.
கடந்திடலாம்...
கண்மணியே. ..
கருமுகிலில் கல் பதித்த
சிறு துளியாய்
கண்சிமிட்டும் மின்மினியாம்
விண்மீன் கூட்டம்
விரைந்தோடி வந்திட்டால்.
இறை இங்கே வந்திடுமே.
துணை நமக்கு நின்றிடுமே.
No comments:
Post a Comment