Friday, May 5, 2017

இசையும் அவளும் …

இசையும் அவளும் …
அசைவும் காற்றும் ..

அசையா இருளும் ..
நிலவாய் அவளும் …

உலவும் தென்றல் - லேசாய்
கலந்து வரும் கானம்
காய்ந்த கண்மாய் தாண்டி
விட்டு விட்டு கேட்கும்
நெருக்கத்தில் இல்லை
நெருக்கமாய் மனதிற்குள்

காற்றில் வந்த இசையாய்
அவளும்
நெருங்க முடியாத் தொலைவில்
நெருக்கமாய் மனதிற்குள் ..

அசைகின்ற  ஓவியமாய்
இசையால்  நீ
பேசுகையில்
இசையால் வடித்த சிற்பமென  

இசை போல வாழ்க்கை
இசைவாக இனிக்க
திசைதோறும்  செயலாற்றி
விசயங்கள் பல கற்று  
நல்லதோர் பணியாற்றி
கள்ளமில்லா உன்
வெள்ளைத் தாமரை
வித்தையினை ..என்
சொத்தாக வேண்டுமென
பெற்றவரும் சொன்னதில்லை
கற்ற கல்வியிலும் சுத்தமில்லை
வெற்றுக் கையாய் ஆனேனே -
சற்றேனும் உயிர்ப்பில்லை -உன்

ஒற்றைக் குரல் கேக்குதடி

இற்றைக்கும் இரவினிலே …

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...