Friday, May 5, 2017

கனவே கலையாதே ..

கனவே கலையாதே ..

க..னவு பல நீயும்  கண்டிடு  …
……...வெள்ளிக் காசா  ..கனவென்பது .
ந..னவு மெய்யென நம்பிடு   
……...நாளை உன் பெயர்  ..நவிலும்
வே..கம் மிக கொண்டிட்டால்
………. வீணாய் வீழ்ந்துபடுவாய்

க..லங்கா நெஞ்சாய்
……திட்டம் கொண்டிங்கு
ந..மக்கென பொதுநல
…….எண்ணமிட்டு ..”நானை “
வே..றாய் புறம் தள்ளி விட்டு  

க..ண்டவர் சொன்னதை கடுகி
………..ஏற்றிடாது - அறம்
ந..ன்றென கொண்டவர் பதம்
……...கருத்தேற்றி ஒழுக்கம் ஈகை
வே..ண்டும் கடமை என  உள்
……...அகத்திறுத்தி ..அன்பால்

க..னவது  மெய்ப்பட ..
………கருமமே ..கண்ணாக
ந..டக்கும் வழியென
……….இலக்கதை நோக்க  
வே..ண்டுதல் வேண்டாமை இலான்

 ……...விரும்பி உன் வழி திறப்பான்  

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...