Friday, May 5, 2017

கம்பரின் இறுதிப் பாடல்

கம்பரின் இறுதிப் பாடல்

புலி ஏவி பெருங்கவி கம்பனை
கிலியாக்கி கொல்லத் துணிந்த
புலிக்கொடியோன் ..கவியை
எலியென்று எண்ணினானோ
பழிக்கஞ்சாது பாவியவன்
பொழிந்த அம்பினால் -அறிவு
விழி கெட்டு அவன் குலமே
நலிவுற்று வீழ்ந்துபட நின்றானே



சோழ மன்னன் குலோத்துங்கன் கம்பரைக் கொல்ல ஒரு புலியை ஏவினானாம். ஆனால் அது அவரிடம் அன்பு காட்டி நின்றதாம். அதனால் குலோத்துங்கனே அம்பெய்தான். அது கம்பர் மார்பில் பாய்ந்தது. அப்போது அவர் உயிர்பிரியும்போது சோழர் பரம்பரை அழிய ஒரு பாடலைப் பாடினாராம். இதுதான் அப்பாடல்
”வில்லம்பு சொல்லம்பு மேதகவே ஆனாலும்
வில்லம்பிற் சொல்லம்பு வீறுடைத்து---வில்லம்பு
பட்டுருவிற்று என்னை;என் பாட்டம்பு நின்குலத்தை
சுட்டெரிக்கும் என்றே துணி
[இருவாட்சி 2017 பொங்கல் மலரில் மகுடேசுவரன்]

தகவல் நன்றி: திரு. வளவத்துறையன்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...