Friday, May 5, 2017

நீல வண்ண ஓடையிலே


நீல வண்ண ஓடையிலே
கால காலமாய் கவின்
சோலையூடே கடந்து
காலை மாலை மறந்து
வேலை வெட்டி துறந்து
சாலையோர சத்தம் விலக்கி
காளையவன் கன்னியுடன்
தோளணைத்து போகையிலே
பாலை நில பாமரனும்
வாழையென குளிர்ந்திடுவான் - அறிவில்
ஏழையவன் கற்றைத்
தாளை கவிதைகளால் நிரப்பிடுவான்

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...