Friday, May 5, 2017

ஜல்லிக்கட்டு

#1
ஹரிபரந்தாமனார்
பரிந்தோடி வந்தார்
தரிசனம் தந்தார்
அறம் நழுவும் நேரம்
தேரோட்டி வருவேன் கீதை சாரமிது
காரோட்டி வந்தார் நல் ஆதாரமிது


#2
நாட்டு மாடுகள் வழியாய் நம்
வீட்டு கன்று குட்டிகளின்
நயம் கண்டு நாட்தோறும்
வியந்து நிற்கின்றோம்
காலத்தின் கலங்கரை விளக்குகளாம்
ஞாலத்தின் எதிர்கால நம்பிக்கை
நட்சத்திரங்கள்...இவர்கள்
அச்சமில்லை…. அறம் வாழும்
மிச்ச காலம் பூமியிலே


#3
வேள்வி ஏற்க வந்தோம்
******************************************************
நீள் கொம்பன் ( long horn)
வாழ் நாட்டினர் நாமன்றோ?
மாள்கின்ற மாடு கன்னு
தோள் தூக்கி நிறுத்த வந்தோம்
தேள் கொட்டிய நிலையாய்
பாழ்பட்டு நிற்கும் நம்
உழவின்
வாழ்நிலைக்கு
கேள்வி கேட்க
வேள்வி ஏற்க வந்தோம்
வேல் கொம்பாய்
நாள்பூராய் நடுவனத்தில்
காளை பின்னே
வேலையாய் திரிந்திட்ட
நிலைதானே டெக்சாசில்
சில நூறு ஆண்டு முன்னே
ஆநிரையின் அருமையது
ஆரோக்கிய வாழ்வெனவே
அன்றாட விவசாயி
நன்றாக அறிந்திடுவான்
ஒன்றாக இணைந்திடுவான்
உடன்பிறவா விவசாயி
உலகத்தின் மறுகோடியிலே
உளமுருகி வாடி நின்றால்
களமிறங்கி காடு கழனி
விளங்கியவன் எல்லோரும் ஓரினமே
விளங்காத வியாபாரி
கலங்காமல் காசு பார்க்க
அலங்கோல அரசியல்
பலவும் தான் செய்து
பலமாகி பணம் நிரப்ப
விலையாக ஏதும் தந்திடுவான்
சொந்த நாட்டு மாடுகளை
வந்த நாட்டிற்காய் நாம்
நிந்தனை செய்திடோம்
எந்தனை எம்
மாந்தரை இழிவு செய் - வணிக
விந்தை மனிதரை
கந்தையாய் எறிந்திடுவோம் - ஆட்டு
மந்தை தனம் மாறி
மொந்தை மயக்கம் மீறி - உலக
சந்தையை தன் பக்கம்
காண செய்த எம் கோடி
ஞானக் குருத்துகளின் வெளிச்சம்
மெரினாவில் காலத்தின்
கலங்கரைவிளக்காய் இன்று

கலக்கம் தெளிந்தது நன்று

No comments:

Post a Comment

அகம்400#2 - கவிதை

#புதுக்கவிதை வடிவில்  சரிந்த மலை  விரிந்த இலை  செழித்த வாழை  பழுத்த குலை  பாரம் தாங்காது  ஓரமாய் சாய்ந்து  விழுந்து சிதறியத...