கலையாத மோனத்தில்
நிலையாக நீருக்குள்
சிலையாகி போனாயோ ?
அலையாழி மாயனவன் மோகினியாய்
சில காலம் வாழ்கையிலே
கலையாத கனவான
காளையவன் கண்டிடவே
மலையாகி மௌனமாய்
பல காலம் தவம் கொண்டாளோ ?
சில வேளை சினந்தாலும்
பல வேளை பரிந்துவக்கும்
கலிகால காதலனை
சிலிர்ப்பாக சிந்தையிலே தானிருத்தி
களிப்பாக உன் உடல்
பாகமதை கடலடியில் கிடத்திய
நாகக் கன்னிகையோ நீ?
மீனுருவாய் வந்திட்ட காதல்
மானுமவள் கடற்கன்னி தானோ?
No comments:
Post a Comment