பசுந்தோகை மயிலாக
விசும்பிடை மரங்களாட
பசுங்காட்டிடை பளிங்காய்
அசைந்தாடும் நீரோடை…- கவி
ஞானியவன் பெருங்காதலுற்று
காணி நிலம் வேண்டியதும் - இயற்கை
ராணியுனை கண்டதனாலோ? நின்னையே
காற்று வெளியிடை கண்ணம்மாவாய்
கீற்று நிலவினில் கண்டு
தோற்றதுவும் இச்சோலைக்
காட்சியிலோ? மாக்கவியின்
நீட்சியாக மலர்ந்ததுவே
மாட்சியாக கவியிரண்டு
No comments:
Post a Comment