
ஆ கண்டேன்
ஆலிலைக் காண்கிலேன்.
ஆலிலைக் காண்கிலேன்.
மா கண்டேன்
மயிலிறகு காண்கிலேன்.
மயிலிறகு காண்கிலேன்.
கோ கண்டேன்
குழல் காண்கிலேன்.
குழல் காண்கிலேன்.
ஆ வேண்டும் ஆலிலை வேண்டும்.
மா வேண்டும் மயிலிறகு வேண்டும்.
கோ வேண்டும் குழல் வேண்டும்.
மா வேண்டும் மயிலிறகு வேண்டும்.
கோ வேண்டும் குழல் வேண்டும்.
பாதம் கண்டு
பரம் காணும்
பதம் எமக்கில்லை.
பரம் காணும்
பதம் எமக்கில்லை.
குழலூதி குழவியாக்கிவிடு.
மயிலிறகால் மனிதமாக்கிவிடு.
மயிலிறகால் மனிதமாக்கிவிடு.
பொற்சதங்கைக்கோர்
நற்கூட்டாய் மயிலிறகு
ஆடக் காணவேண்டும் - குழல்
பாட கானம் வேண்டும்.
நற்கூட்டாய் மயிலிறகு
ஆடக் காணவேண்டும் - குழல்
பாட கானம் வேண்டும்.
No comments:
Post a Comment