கழிந்த காலம்
கலைந்த மேகம்
கலைந்த மேகம் திரட்டி
கடல் கொண்டிடல் கூடுமோ?
மடல் விரித்த தாழை
மொட்டாய் ஆகுமோ?
விரவியோடிய மணம்
மருவி பூவில் புகுமோ?
பட்டுத் தெறித்த பதம் - வாய்
விட்டு வருதல் நிதம்
சப்த கூட்டமது
நிசப்தமாய் நிச்சலனமாகுமோ?
மசிந்த மாவதனை
மாகாணி நெல்லாக்கி
முப்போகம் விளைவிக்க
எப்போதும் வழியுண்டோ?
கழிந்த காலம் ..
அழிந்த கோலம்
விழுந்து புரண்டால்
கழியும் நிகழ்கணம்
அழியும் கோலமாய்
தெளிவாய் இக்கணம்
பழிக்கஞ்சி பண்பாய்
செழிப்பாய் மனம் இருந்திட்டால்
பொழிப்பாய் பொங்குமே - நதி
சுழிப்பாய் நகர்ந்திடுமே
வாழ்வோட்டம்
கடிந்த கால கடுகுகள் மேல்
மடிந்த மனதை நீட்டி
விடிந்த பொழுதை காட்டி
தொடர்ந்த கதையே
நொடியா மகிழ்வு.
#Rajikavithaigal
தமிழமுதுக் கவிச்சாரல் குழு
No comments:
Post a Comment